காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விட கர்நாடகா அரசு தொடர்ந்து , மறுத்து வருகிறது . கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திலும் தமிழ்நாட்டில் அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 5000 கன அடி நீரை கர்நாடகா திறக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும் கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது . இதனால், தமிழகத்திற்கு நீர் திறக்க வேண்டிய கட்டாயம் கர்நாடகத்திற்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து நீர் திறந்த விடக்கூடாது என கோரி கர்நாடகத்தில் பாஜகவினர் இன்று ( 23.09.2023 ) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . ஏற்கனவே, கர்நாடக விவசாயிகளும் தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.