திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள பச்சைமலை தாவரங்களும், மூலிகைகளும் நிரம்பியுள்ள மலைப்பகுதியாகும். இந்தப் பகுதியில் கல்லாறு, சின்னாறு, மருதையாறு, வெள்ளாறு முதலான ஆறுகளில் கோடை மழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. பச்சைமலை டாப் செங்காட்டுப்பட்டியில் இருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மங்களம் அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் வருவதற்கும், குளிப்பதற்கும் வனத்துறையினர் தற்காலிகமாக தடை விதித்துள்ளனர். இதேபோல, பச்சைமலை பெரிய மங்களத்திலிருந்து மலைவாழ் மக்கள் பயன்பாட்டிலுள்ள ஒற்றையடி பாதை வழியில் உள்ள எட்டெருமைப்பாலி அருவியில் சுமார் 100 மீட்டர் உயரத்திலிருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதாலும், இந்த அருவிக்கு அருகே பாம்புகள் மற்றும் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகம் என்பதாலும், அருவிக்கு செல்லும் பாதை கரடுமுரடாகவும், இறங்கும் வழி ஆபத்தாக உள்ளதாலும் இந்த அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கும், நீராடுவதற்கும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
Comments are closed.