சட்டத்தை மதிக்காமல் பதியப்பட்டதா போலீஸ் எஃப். ஐ. ஆர் ? – அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் புதிய சர்ச்சை !
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவரை பல்கலைக்கழக வளாகத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பில் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார்,இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஞான சேகரன் என்ற நபரை கைது செய்துள்ளனர்.இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீசார் தரப்பில் பதியப்பட்ட எஃப்.ஐ.ஆர் காப்பி தற்போது வெளியாகி சர்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல், போக்சோ ஆகிய வழக்குகளில் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்படும் போது பாதிக்கப்பட்ட நபரின் விவரங்களை வெளியிடக் கூடாது என்பது சட்டமாக இருக்கிறது. ஆனால் இவ்வழக்கில் போலீசார் பதிந்துள்ள எஃப்.ஐ.ஆரில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணின் பெயர், முகவரி, அவர் படிக்கும் இடம், வசிப்பிடம் ஆகிய பல்வேறு விபரங்கள் பதிவாகியுள்ளன. இந்த எஃப் ஐ ஆர் காப்பி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed.