Rock Fort Times
Online News

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு ரயிலில் செல்ல வேண்டுமா? ரிசர்வேஷன் தொடங்கியாச்சு…!

தமிழர்களின் முக்கியமான பண்டிகளில் ஒன்று பொங்கல். வெளியூர்களில் தங்கி வேலை பார்ப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று தங்களது  குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுவார்கள்.  இதனால், பஸ்  ரயில்களில் கூட்டம் அலைமோதும். கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ரயில்வே நிர்வாகம் ரிசர்வேஷனை தொடங்கியுள்ளது.  அதன்படி,  செப்டம்பர் 12ம் தேதி முதல் ரிசர்வேஷன் தொடங்கப்பட உள்ளது. அந்தவகையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதி(வெள்ளிக்கிழமை) பயணம் செய்ய விரும்புபவர்கள் செப்.12 வியாழக்கிழமையும், ஜன 11-ம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் செப். 13-ம் தேதியும், ஜன. 12-ம் தேதி பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள் செப்.14-ம் தேதியும் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம். பொங்கலுக்கு முந்தைய நாளான போகி பண்டிகை திங்கள்கிழமை வருகிறது.  அதேசமயம் ஜனவரி 13-ம் தேதி போகி பண்டிகை அன்று பயணம் செய்ய விரும்புவர்கள் செப்.15 ம் தேதி பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம். வழக்கம்போல, பண்டிகைகால ரயில் டிக்கெட் முன்பதிவு காலை 8 மணிக்குத் தொடங்கும்.  ஐஆர்சிடிசி இணையதளம் வழியாகவோ அல்லது டிக்கெட் கவுன்டர்களிலோ முன்பதிவு செய்யலாம். அடுத்தாண்டு 2025 பொங்கல் பண்டிகை ஜனவரி 14 ம் தேதி (செவ்வாய்க்கிழமை) வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்