Rock Fort Times
Online News

மகளிர் சுய  உதவிக்குழு கடன்கள், கல்வி கடன் தள்ளுபடி, மாதந்தோறும் 3 கேஸ் சிலிண்டர் இலவசம்…-  அதிமுக 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதி…! 

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது.இதனால், அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க அதிமுகவும், ஆட்சியை தக்க வைக்க திமுகவும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு  பொதுமக்களிடையே உரையாற்றினார். தற்போது கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு என எடப்பாடி பழனிச்சாமி பிசியாக இருக்கிறார். இந்நிலையில் சென்னையில் இன்று(பிப்.4) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:-

* முதியோர் உதவித்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும்.

*  ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.

* ஜல்லிக்கட்டு போட்டியின் போது வீரர் உயிரிழந்தால் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

* ஜல்லிக்கட்டின் போது படுகாயமடைந்தால் ரூ.2 லட்சம் வழங்கப்படும்.

* மாணவர்கள் வங்கிகளில் பெற்ற  கல்வி கடன் ரத்து செய்யப்படும்.

* மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

* சிறுபான்மையின மக்கள் சுய தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதில், அரசு டவுன் பஸ்களில் பெண்களைப் போல ஆண்களுக்கும்  கட்டணம் கிடையாது, இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2000 வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்