Rock Fort Times
Online News

கூட்டுறவு வங்கியில் பெற்ற பயிர் கடன் தள்ளுபடி-மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள்…- திருச்சியில் நடைபெற்ற விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்..!

திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கவுண்டம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நிர்வாக சிக்கல்களால், பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படாத சூழல் இருந்தது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அக்கூட்டுறவு சங்கத்தில் 2 ஆயிரத்து116 பேர் வாங்கிய ரூ.14 கோடி பயிர் கடன்,44 மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 541 பேர் வாங்கிய ரூ.86.48 லட்சம் சுய உதவிக்குழு கடன் ,938 பேரின் ரூ.3 கோடியே 31லட்சம் மதிப்புள்ள நகைக்கடன் ஆகியவை அண்மையில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, கவுண்டம்பட்டி பகுதி மக்கள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து அன்பையும் நன்றியையும் தெரிவித்தனர்.  மேலும், இவ்விழாவில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு வங்கி கடன் இணைப்புகளையும், 38 நபர்களுக்கு கால்நடை பராமரிப்பு கடன்களையும் அவர் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டி, லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்