Rock Fort Times
Online News

ஜனாதிபதி திரவுபதி முர்மு 30-ம் தேதி வருகை : திருச்சியில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை- கலெக்டர் பிரதீப்குமார்…!

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாள் பயணமாக டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு நேற்று(27-11-2024) வந்தார். பின்னர் அவர் கார் மூலம் புறப்பட்டு கோத்தகிரி வழியாக நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ் பவனுக்கு சென்றார். 30- ம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகபட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு விழா பேருரை ஆற்றுகிறார். திருவாரூர் செல்ல திருச்சி விமான நிலையத்திற்கு 30-ந்தேதி ஜனாதிபதி வருகை தரவுள்ளதால் பாதுகாப்பு கருதி நாளை 29-ந்தேதி மற்றும் 30ம் தேதி ஜனாதிபதி பயணம் செய்யும் சாலைகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.எனவே நாளையும், நாளை மறுநாளும் தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
*

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்