மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி – குகி இனக்குழுக்களுக்கு இடையே கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் முதல் மோதல் வெடித்துள்ளது. இந்த மோதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த தவறியதற்காக முதல்-மந்திரி பைரன் சிங் பதவி விலகினார். இதையடுத்து, அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது அமைதி திரும்பியுள்ளது. இந்நிலையில், மெய்தி இனத்தை சேர்ந்த அரம்பாய் தெங்கோல் என்ற குழுவின் தலைவர் கண்ணன் சிங் உள்பட 6 பேரை மணிப்பூர் போலீசார் கைது செய்தனர். இதனைக் கண்டித்து மெய்தி மக்கள் போராட்டம், வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையை தடுக்க பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். இதனால், மணிப்பூரில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. அதேவேளை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிப்பூரில் 5 மாவட்டங்களில் இணையதள சேவை நேற்று இரவு 11.45 மணி முதல் துண்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேற்கு இம்பால், கிழக்கு இம்பால், தவுபல், பிஷ்ணுபூர், காக்சிங் ஆகிய 5 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
Comments are closed.