தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள வெளிச்சந்தையில் தேமுதிக மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகளை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்வு செய்திருப்பதாக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். அதன்படி, கட்சியின் அவைத் தலைவராக இளங்கோவன், பொருளாளராக சுதீஷ், தலைமை நிலையச் செயலாளராக பார்த்தசாரதி, கொள்கை பரப்புச் செயலாளராக அழகாபுரம் ஆ.மோகன்ராஜ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.