Rock Fort Times
Online News

அரசியலுக்கு வந்தால் சினிமாவில் நடிக்க மாட்டேன் விஜய்…?

நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் சார்பில் கடந்த கல்வியாண்டில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் தமிழக முழுவதும் தொகுதி வாரியாக சிறப்பிடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை சான்றிதழ் வழங்கும் விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் சுமார் 1200 மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் நடிகர் விஜய் மேடையில் நின்றவாறு பொன்னாடை போர்த்தி சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார். இந்த நிகழ்வு மூலம் தொகுதிவாரியாக அரசியலில் தன்னை முன்னெடுத்து செல்வதற்காக விஜய் நடத்தினார் என பல்வேறு தரப்பினர் கருத்துக்களை பதிவு செய்தனர். இதற்கு இடையே வெங்கட் பிரபுவுடன் இணைந்து நடிக்க உள்ள அடுத்த படத்திற்கு பிறகும் மூன்று ஆண்டுகள் நடிப்பில் இருந்து விஜய் ஓய்வெடுக்க உள்ளதாகவும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கவனம் செலுத்து உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் பனையூர் இல்லத்தில் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் இன்று ( 11.07.2023 ) முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த கூட்டம் முடிந்ததும் வெளியே வந்த நிர்வாகிகள், அரசியலுக்கு வந்தால் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விடுவதாகவும் தன் கவனம் முழுக்க அரசியலில் மட்டுமே இருக்கும் என விஜய் கூறினார். அவர் அரசியலுக்கு வருவதற்கான அனைத்து கட்டமைப்புகளையும் நாங்கள் செய்து விட்டோம். அவர் கைகாட்டினால் அரசியலில் ஈடுபடுவதோடு அவரோடு தொடர்ந்து பயணிப்போம் என தெரிவித்துள்ளனர்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்