திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இன்று(05-01-2026) தனது 58-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரிலும், டெலிபோனிலும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், திமுக எம்.பி. கனிமொழிக்கு தவெக தலைவர் விஜய் தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். வருகிற சட்டமன்றத் தேர்தலில் தவெகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டி’ என கூறிவரும் நிலையில் கனிமொழிக்கு விஜய் பிறந்த நாள் கூறியது பேசுபொருளாக மாறியிருக்கிறது.

Comments are closed.