Rock Fort Times
Online News

சட்டமன்றத் தேர்தலுக்காக 36 வழக்கறிஞர்கள் கொண்ட மாநில சட்ட பாதுகாப்பு குழுவை அமைத்தார், விஜய்…!

வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக மிகப்பெரிய சக்தியாக தமிழக வெற்றிக்கழகம் உருவெடுக்கும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ‘சட்டமன்றத் தேர்தல் பிரசார மாநிலச் சட்டப் பாதுகாப்புக் குழு’-வை விஜய் நியமித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 36 வழக்கறிஞர்கள் கொண்ட ‘சட்டமன்றத் தேர்தல் பிரசார மாநிலச் சட்டப் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கீழ்கண்ட வழக்கறிஞர்கள் அந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும்.

கழகத்தின் இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார், பொருளாளர் வெங்கடராமன், மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிரிவு அறிவழகன், மாநில ஒருங்கிணைப்பாளர் சட்ட ஆலோசனை பிரிவு குமரேசன், மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சட்ட ஆலோசனை பிரிவு சிவசண்முகம், மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சட்ட ஆலோசனை பிரிவு பாண்டி, இந்திரா தன்ராஜ்- மாநில இணை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிரிவு, சக்கரவர்த்தி-மாநில இணை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிரிவு, செல்வபாரதி- மாநில இணை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிரிவு, வெலிங்டன்- மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சட்ட ஆலோசனை பிரிவு, தன்ராஜ்-  மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சட்ட ஆலோசனை பிரிவு, விஜயகுமார்- மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சட்ட ஆலோசனை பிரிவு, ரேவந்த் சரண்- சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர், சத்யகுமார்- தேசிய செய்தித் தொடர்பாளர் மற்றும் லெனின், மதுரை சங்கரநாராயணன், சென்னை ராஜரத்தினம், சென்னை உதயகுமார்,திருப்பத்தூர் சுரேஷ் பாபு, திருவாரூர் அன்பரசன், அஜித்குமார், செங்கல்பட்டு மகேந்திரன், நாகை இளமாறன், தஞ்சாவூர் முத்துகுமரன், திருவள்ளூர் வெற்றிச்செல்வன், திருச்சி கோகிலா ராணி, திருப்பத்தூர் லூயிசாள் ரமேஷ், திருவண்ணாமலை தலித் டைகர், திருவண்ணாமலை பொன்னுசாமி, கடலூர் தங்ககொளஞ்சி நாதன், சோழவந்தான் தியாகராஜன், விழுப்புரம் முனியப்பன், மதுரை தனசேகரன், காஞ்சிபுரம் நரேந்திரகுமார், திருவண்ணாமலை சுகுமார் ஆகியோர் எனது ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்தக் குழுவிற்குக் கழக நிர்வாகிகளும், தோழர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்