Rock Fort Times
Online News

ஊட்டி, கொடைக்கானலில் வாகன கட்டுப்பாடு தளர்வு…- மேல்முறைட்டை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்!

ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை விடுமுறை நாட்களில் கட்டுக்கடங்காமல் உள்ளது. இதனால், மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா வாகனங்கள் செல்ல உயர் நீதிமன்றம் கட்டுப்பாடுகள் விதித்தது. இந்த நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை குறைவதால் தங்களின் தொழில் பாதிக்கப்படுவதாக தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சூரியகாந்த் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஊட்டி, கொடைக்கானலில் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதித்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவில் தலையிட விரும்பவில்லை. அனைத்து சுற்றுச்சூழல் விவகாரங்களையும் கருத்தில் கொண்டே இந்த கட்டுப்பாட்டை ஐ-கோர்ட் விதித்திருக்கிறது” என்று கூறி, மேல்முறையீட்டு மனுவை ஏற்க மறுத்துவிட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்