திருச்சி மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட நான்கு சக்கர காவல் வாகனம்-1( பொலிரோ ஜீப்) மற்றும் இருசக்கர வாகனம்-2 ( பல்சர், அப்பாச்சி) ஆக மொத்தம் 3 காவல் வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த வாகனங்களின் பொது ஏலம் வருகின்ற 23.12.2024( திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் 19-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாநகர ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள காவல் வாகனங்களை பார்வையிடலாம். வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நாளான 23 ஆம் தேதி காலை 8 மணிமுதல் 10 மணிவரை தங்களது ஆதார் அட்டையுடன் ரூ.5000 முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ள வேணடும் என மாநகர காவல் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
Comments are closed.