Rock Fort Times
Online News

வீரப்பன் மகளுக்கு நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பு…!

வீரப்பன் மகள் வித்யா ராணிக்கு நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.இவர், முதலில் பாமகவில் இருந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். பாஜகவில் அவருக்கு ஓபிசி அணியின் மாநிலத் துணைத்தலைர் பொறுப்பு வழங்கப்பட்டது. பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி, கடந்த ஆண்டு நாம் தமிழர் கட்சியில் இணைந்தார். கடந்த மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும் 4-ம் இடம் பெற்றார். தொடர்ந்து கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவந்த வித்யா ராணிக்கு, தற்போது நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாவட்டம், மேட்டூர் தொகுதியைச் சேர்ந்த வித்யா வீரப்பன், நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார். விழுப்புரத்தைச் சேர்ந்த மருத்துவர் அபிநயா பொன்னிவளவன் என்பவரும் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்