Rock Fort Times
Online News

திருச்சி திமுக மாநாட்டுக்கு வந்த வேன் கவிழ்ந்து விபத்து: 12க்கும் மேற்பட்டோர் காயம்…!

திருச்சி, சிறுகனூரில் திமுகவின் மாநில மாநாடு இன்று (மார்ச் 9) மாலை நடைபெறுகிறது. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகளும், தொண்டர்களும் சாரை, சாரையாக வந்த வண்ணம் உள்ளனர். இதேபோல், நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தாலுகாவிலிருந்து 20க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்க வேனில் வந்து கொண்டிருந்தனர். தஞ்சாவூர், விளார் புறவழிச்சாலை அருகே வேன் வந்து கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட திமுக தொண்டர்களுக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக, அருகில் இருந்தவர்கள் வேனில் இருந்தவர்களை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தஞ்சாவூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்