திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் பெருமாளுக்கு நடத்தப்படும் விழாக்கள் அனைத்தும் தாயாருக்கும் நடத்தப்படும். அதன்படி, உற்சவர் நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றதை தொடர்ந்து இன்று (10-01-2026) முதல் உற்சவர் ரெங்க நாச்சியாருக்கு வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து உற்சவத்துடன் தொடங்குகிறது. இந்த விழா வருகிற 20-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. இதில் பகல் பத்து உற்சவம் ஐந்து நாட்களும், இராப்பத்து உற்சவம் ஐந்து நாட்களும் நடைபெறும். இன்று முதல் ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்தவாறே பகல் பத்து உற்சவமான 2000 திருமொழி பாசுரங்களை ஐந்து நாட்கள் தினமும் மாலையில் கேட்டருளுவார். ராப்பத்து உற்சவம் எனப்படும் திருவாய்மொழி திருநாள் வருகிற 15-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடைபெறுகிறது. 20-ந் தேதி இயற்பா சாற்று முறை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Comments are closed.