வைகுண்ட ஏகாதசி திருநாளின் பகல் பத்து உற்சவத்தின் 3ஆம் நாளான இன்று, நம்பெருமாள் திருமொழித் திருநாளில் நாச்சியார் திருமொழிக்காக அலங்கரிக்கப்பட்டு சேவை சாதிக்கிறார். அஜந்தா சௌரிக் கொண்டை சாற்றி, அதில் சந்திர–சூர்ய வில்லை, சந்திர ஹாரம், கலிங்கத் துறை, சிகப்பு கல் நெற்றி பட்டை சாற்றி அழகுபடுத்தப்பட்டார். திருமார்பில் கண்டபேரண்ட பக்ஷி பதக்கம், அதன் மேல் அழகிய மணவாளன் பதக்கம் என ஸ்ரீ ரங்கநாச்சியார் பதக்கம் சாற்றப்பட்டு, வைரக்கல் ரங்கூன் அட்டிகை, நெல்லிக்காய் மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் தங்க பூண் பவழ மாலை, எட்டு வட முத்து மாலை, தங்க காசு மாலை, மகரி உள்ளிட்ட அலங்காரங்கள் வெள்ளை–சிகப்பு நிறங்களில் அடுக்காக பதக்கங்களுடன் சாற்றப்பட்டன. சிகப்புக் கல் அபய ஹஸ்தம், ரதனங்கி கடி அஸ்தம் (இடது திருக்கை), சிகப்பு கல் இழைத்த திருவடியில் சதங்கை சாற்றி, தாமரை நிறப் பட்டுடுத்தி, பின் சேவையாக பூஜ கீர்த்தி மற்றும் மகாலட்சுமி பதக்கம் அணிந்து நம்பெருமாள் பக்தர்களுக்கு திருக்காட்சியளித்து வருகிறார்.

Comments are closed.