தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் இணை நிர்வாக இயக்குனராக பணியாற்றிய வே.சரவணன் ஐஏஎஸ் திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து அவர் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று (15.02.2024) ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அப்போது அவர், மாநகர மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதிலும் முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவேன் என தெரிவித்தார். இதற்கு முன்பு இங்கு பணியாற்றிய வைத்திநாதன் ஐஏஎஸ் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.