திருச்சி மாவட்ட கலெக்டராக பணியாற்றிய மா.பிரதீப்குமார் பேரூராட்சிகள் இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய வே.சரவணன் திருச்சி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். அவர் இன்று(25-06-2025) திருச்சி மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் பல்வேறு உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அவை அனைத்தும் சிறப்பான முறையில் செய்து முடிக்கப்படும். பொதுமக்கள் எவ்வித தயக்கமும் இன்றி தங்களுடைய கோரிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகளை அணுகலாம். அவர்களுடைய கோரிக்கைகளை உடனடியாக தீர்ப்பதற்கு அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தேர்தல் ஆணையம் மூலமாக செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
Comments are closed.