Rock Fort Times
Online News

வி.சி.க. பேரணி எதிரொலி…- திருச்சி மாநகர போக்குவரத்தில் முக்கிய மாற்றம்..!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நாளை ( ஜூன்.14 ) ஜனநாயகம் காப்போம் பேரணி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் தொடங்கி மாநகராட்சி மைய அலுவலகம் வரை நடைபெறுகிறது. இதயொட்டி திருச்சி மாநகர போக்குவரத்தில் மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் என். காமினி உத்தரவிட்டுள்ளார் அதன்படி, புதுக்கோட்டையிலிருந்து திருச்சி வருகிற கனரக சரக்கு வாகனங்கள் அனைத்தும் மாத்தூர் பரணி பவன் ஹோட்டல் சுற்றுச்சாலை வழியாக திரும்பி வர வேண்டும். ஜி கார்னரில் இருந்து ஏர்போர்ட் மற்றும் புதுக்கோட்டை செல்லும் அனைத்து வாகனங்களும் மன்னார் புரம் மேம்பாலம், செட்டியப்பட்டி பாலம் வழியாக புதிய சுற்றுச்சாலை வழியாக செல்ல வேண்டும். மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, சேலம்,நாமக்கல், மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாக செல்கிற அனைத்து பேருந்துகளும் பெரியார் சிலை, காமராஜர் சிலை ,அரிஸ்டோ மேம்பாலம், மன்னார்புரம் இபி ஆபிஸ் வழியாக செல்ல வேண்டும். அதேபோல, புதுக்கோட்டையிலிருந்து சென்னை மற்றும் திருச்சி மாநகருக்குள் வரும் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் வயர்லெஸ் சாலையில் திருப்பி விடப்பட்டு கே.கே.நகர், எல்ஐசி காலனி, சுந்தர் நகர்,மன்னார்புரம் வழியாக வரவேண்டும். அதேபோல பாலக்கரையிலிருந்து மத்திய பேருந்து நிலையம் வரும் நகர பேருந்துகள் அனைத்தும் பாலக்கரை மேம்பாலத்தில் திருப்பி விடப்பட்டு பீமநகர், கோர்ட்,வெஸ்ட்ரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பெரிய மிளகு பாறை வழியாக மத்திய பேருந்து நிலையம் வரவேண்டும். மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பாலக்கரை வழியாக செல்லும் நகர பேருந்துகள் அனைத்தும் வெஸ்ட்ரி ஸ்கூல், எம்ஜிஆர் சிலை, புத்தூர் 4 ரோடு, சவுத் ஆர்ச், தென்னூர் பாலம் வழியாக செல்ல வேண்டும். அதேபோல எம்ஜிஆர் சிலை ரவுண்டானாவில் இருந்து டிவிஎஸ் டோல்கேட் செல்லும் அனைத்து வாகனங்களும், கண்டோன்மென்ட் வெஸ்ட்ரி ஸ்கூல், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பெரிய மிளகு பாறை, அரிஸ்டோ மேம்பாலம், மன்னார்புரம் வழியாக செல்ல வேண்டும். ஜி கார்னரில் இருந்து ஏர்போர்ட் மற்றும் புதுக்கோட்டை செல்லும் அனைத்து வாகனங்களும் மன்னார்புரம், கே.கே நகர், வயர்லெஸ் சாலை வழியாக செல்ல வேண்டும். பேரணி துவங்கி முடியும் வரை பொதுமக்கள் டிவிஎஸ் டோல்கேட்டில் இருந்து கன்டோன்மென்ட் சந்திப்பு சாலை வழியாக பயணிப்பதை தவிர்த்து மாற்றுப் பாதையில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்