திருச்சி மாநகர போலீஸ் கமிஷ்னர் எம். சத்தியப்ரியா ஐபிஎஸ் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது ;
திருச்சி மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட வேன், கார், ஜீப் உள்ளிட்ட 9 வாகனங்கள் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 13 வாகனங்கள் ஜூன் 8ம் தேதி பொது ஏலத்தில் விடப்படவுள்ளன. திருச்சி கே.கே.நகர் பகுதியில் அமைந்துள்ள மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த ஏலத்தில், ஏலம் எடுக்க விரும்புவோர் வாகனங்களை ஜூன் 5 முதல் 7-ம் தேதி வரை காலை 10 முதல் மாலை 5 வரை பார்வையிடலாம். ஏலம் காலை 8 முதல் 10 மணி வரை இருக்கும். ஏலம் எடுக்க விரும்புவோர் தங்களது ஆதார் அட்டையுடன் வந்து ரூ.5000 முன்பணம் செலுத்தி பங்கேற்கலாம். ஏலம் எடுத்த உடன் ஏலத்தொகையுடன் நான்கு சக்கர வாகனத்திற்கு 18 சதவிகித சரக்கு மற்றும் சேவை வரி, இருசக்கர வாகனத்திற்கு 12 சதவிகித வரியை செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 946
Comments are closed, but trackbacks and pingbacks are open.