திருச்சி, திருவெறும்பூரில் பாதுகாப்பின்றி பாதாள சாக்கடை பணி ! வடமாநில தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி!
திருச்சி, மாநகராட்சிக்கு உட்பட்ட திருவெறும்பூர் மற்றும் காட்டூர் பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகளுக்கான வேலைகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இதற்கான வேலைகளை எல்&டி நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறது.இந்நிலையில், திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 41 வது வார்டு புத்துக்கோவில் தெருவில், பாதாள சாக்கடைக்காக துளையிடும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரும் ஒருவர்.இவர் பாதாள சாக்கடை பணிகளுக்காக துளையிடும் பணியில் ஈடுபட்ட போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார்.படுகாயமடைந்த அவரை உடனிருந்த சக தொழிலாளர்கள் மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இருந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசருக்கு தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதோடு இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருவெறும்பூர் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை மேற்கொண்டு வரும் எல் அண்ட் டி நிறுவனம் அரசு விதிமுறைகளின் படி பணியாளர்களுக்கான தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என்பது, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Comments are closed.