Rock Fort Times
Online News

கும்பகோணத்தில் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம்…- அறிவித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின் ..!

தஞ்சை மாவட்டம், ‘கும்பகோணத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய( ஏப்ரல் 24) கூட்டத்தொடரில் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் தொடங்க பல்வேறு கட்சிகள் சட்டசபையில் கோரிக்கை வைத்தன. பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி மணி பேசுகையில், அகில இந்திய அளவில் நேரு, இந்திரா காந்தி பெயரில் பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆனால், கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் இல்லை. ஆகவே கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ”கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டவர் கருணாநிதி. கும்பகோணத்தில் கருணாநிதி பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும்” என தெரிவித்தார். இதனை திமுக உறுப்பினர்கள் வரவேற்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்