திருச்சியில் “உங்களுடன் ஸ்டாலின்”திட்ட முகாம்: தீர்வு காணப்பட்ட மனுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்…!
பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற சிறப்பு முகாமை தமிழ்நாடு முழுவதும் நடத்த ஆணை பிறப்பித்துள்ளார். அந்தவகையில் திருச்சி, உறையூர் வெக்காளியம்மன் கோவில் தெரு பகுதியில் இன்று (ஜூலை 29) “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் 13 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். முகாமினை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் தீர்வு காணப்பட்ட மனுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட கலெக்டர் வே.சரவணன், மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் மதுபாலன், மாவட்ட நகர் ஊரமைப்பு குழு உறுப்பினர் வைரமணி, நகர பொறியாளர் சிவபாதம், மாமன்ற உறுப்பினர்கள் பங்கஜம் மதிவாணன், நாகலட்சுமி, சுரேஷ், ராமதாஸ், முன்னாள் கவுன்சிலர் திருநாவுக்கரசு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.