தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதேவேளை, தமிழகம் உள்பட 19 மாநிலங்களில் புதிய தலைவர்களை நியமனம் செய்வதற்கான பா.ஜ.க. தேசிய தலைமை தீவிரம் காட்டி வருகிறது. அந்தவகையில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் போட்டியிட நயினார் நாகேந்திரன் நேற்று விருப்ப மனு தாக்கல் செய்தார். வேறு யாரும் விருப்பமனு தாக்கல் செய்யாத நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் இன்று(12-04-2025) பொறுப்பேற்றார். சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில், நயினார் நாகேந்திரன் பா.ஜ.க. மாநில தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். மேலும், மாநில தலைவருக்கான சான்றிதழையும் அவர் பெற்றுக்கொண்டார்.பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர்கள் தருண் சுக், கிஷன் ரெட்டி ஆகியோர் நயினார் நாகேந்திரனுக்கு சான்றிதழை வழங்கினர். பா.ஜ.க. மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரனுக்கு, சுதாகர் ரெட்டி பா.ஜ.க. துண்டு அணிவித்து திருப்பதி பிரசாதத்தை அளித்தார்.
Comments are closed.