பொன்விழா கண்ட திருச்சி ஜில்லா நாயுடு மஹாஜன சங்கம் சார்பில் ஆண்டுதோறும் யுகாதி பெருவிழா மற்றும் குடும்ப விழா நடைபெற்று வருகின்றன. அதேபோல இந்த ஆண்டும் யுகாதி பெருவிழா மற்றும் குடும்ப விழா நாளை(30-03-2025) ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. திருச்சி, இபி ரோடு செல்வ விநாயகர் கோவில் தெருவில் உள்ள திருச்சி ஜில்லா நாயுடு மஹாஜன சங்க திருமண மண்டபத்தில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை விழா நடக்கிறது. விழாவிற்கு சங்கத்தின் தலைவர் பி.விஜயகுமார் நாயுடு தலைமை தாங்கி விழா பேருரை ஆற்றுகிறார்.
சங்கத்தின் மூத்த நிர்வாகியும், துணைத் தலைவருமான டி.எல்.கிருஷ்ணமூர்த்தி நாயுடு சங்கத்தின் கொடியை ஏற்றி வைக்கிறார். மகளிர் அணியினர் குத்துவிளக்கேற்றுகின்றனர். செயலாளர் எஸ்.கோவிந்த ராஜுலு நாயுடு அனைவரையும் வரவேற்று பேசுகிறார். துணைத் தலைவர்கள் பி.என்.கலிய பெருமாள் நாயுடு, ஜி.குணசேகரன் நாயுடு, வி.ராஜேந்திரகுமார் நாயுடு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இணைச்செயலாளர் ஜெ.வேணுகோபால் நாயுடு வாழ்த்துரை வழங்குகின்றார். விழாவில் சங்கத்தின் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், இளைஞர் அணி, மகளிர் அணி நிர்வாகிகள், கிளைச் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். விழாவை முன்னிட்டு பொது அறிவு வினாடி- வினா போட்டி நடக்கின்றன. முடிவில் பொருளாளர் ஆர்.பிரபுராம் நாயுடு நன்றி கூறுகிறார்.

Comments are closed.