திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுகவிடம் இரட்டை இலக்க தொகுதிகளை கேட்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், மக்கள் நீதி மய்யத்தின் சின்னமான டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தநிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இன்று (24-01-2026) நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகளை கேட்டுப் பெறுவது? எந்த சின்னத்தில் போட்டியிடுவது?
என ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் 16 தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் ரூ.50,000 செலுத்தி விருப்ப மனுவை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும், தேர்தல் பணிகளை செய்ய கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் உள்ளிட்ட 5 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நியமித்தார்.

Comments are closed.