திருச்சி அருகே துறையூர் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு – இன்று ஒரே நாளில் துறையூர் பகுதியில் இரண்டு இடங்களில் உடலில் வெட்டு காயங்களுடன் பிணங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி அருகே முசிறியில் இருந்து துறையூர் செல்லும் சாலையில்
பொண்ணு சங்கம் பட்டி என்ற பகுதியில் உள்ள வாய்க்கால் பாலத்திற்கு அடியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் சடலமாக கிடப்பதாக ஜம்புநாதபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிபடையில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்று
அடையாளம் தெரியாத அந்த நபரின் உடலை மீட்டனர்.
அவருடைய உடலில் வெட்டு காயங்கள் இருந்தது.
அவரை யாரேனும் கொலை செய்து வீசி சென்று உள்ளார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த
முசிறி காவல் கண்காணிப்பாளர் யாஸ்மின் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
திருச்சி துறையூர் அருகே ஒரே நாளில் இரண்டு ஆண் சடலங்கள் ஆறு மற்றும் வாய்க்கால் பாலங்களுக்கு அடியில் வெவ்வேறு இடங்களில் மீட்கப்பட்ட சம்பவம் துறையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று காலை துறையூர் பகுதியில் கொத்தம்பட்டி குண்டாற்று பாலம் அருகே உடல் சிதைந்த நிலையில் ஒரு ஆண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.