அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் திருச்சி, புத்தூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், தனது கல்லூரி தோழியுடன் காரில் கோப்பு பகுதியில் சாலையோரம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த எட்டரை நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் (24), ஸ்ரீரங்கம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் ,எட்டரை சஞ்தித்குமார், அதவத்தூர் சதீஷ்குமார் ஆகிய 4 பேர் சேர்ந்து அந்த காரின் கண்ணாடியை தட்டியுள்ளனர். உடனே, கல்லூரி மாணவர் காரை எடுத்துக்கொண்டு வேகமாக புறப்பட்டார். இருந்த போதிலும் அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் காரை துரத்தி சென்றனர். பின்னர் உய்யக்கொண்டான் திருமலை – வயலூர் ரோடு டாஸ்மாக் கடை அருகே காரை வழிமறித்து கத்தி முனையில் மாணவரை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவர் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் நவீன் குமார், சிவசுப்பிரமணியன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
Comments are closed.