கோவையை சேர்ந்த பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன். இவர் மோட்டார் சைக்கிள்களில் சாகசங்கள் செய்து அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அவருக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இதனால் அவர் சினிமாவில் கதாநாயகனாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார். அவரது மோட்டார் சைக்கிள் சாகச வீடியோ பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. சாலை விதிமுறைகளை பின்பற்றாமல் வாகன ஓட்டுனர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவர் கைது செய்யப்பட்டார். இதன் காரணமாக அவர் நடித்த படமும் கைவிடப்பட்டது. பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர் தான் செல்லும் இடங்களில் எல்லாம் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்தநிலையில் அண்மையில் டிடிஎஃப் வாசன் தனது நண்பர்களுடன் திருப்பதிக்கு சென்று இருந்தார். அப்போது ஏழுமலையானை தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்களுக்கு இடையூறு செய்யும் விதத்தில் டிடிஎஃப் வாசன் மற்றும் அவரது நண்பர்கள் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து டிடிஎஃப் வாசன் உள்ளிட்டோர் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்தனா். அந்த வழக்கு குறித்து ஆந்திர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா். அந்த வழக்கில் தற்போது டிடிஎஃப் வாசனின் வங்கி கணக்குகளை ஆந்திரா போலீசார் முடக்கி உள்ளனா். இதுதொடர்பாக போலீசார் தரப்பில் கூறுகையில், டிடிஎஃப் வாசன் திருப்பதில் கோவிலில் பக்தர்களை ஏமாற்றி வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்தார். எனவே அந்த பணத்தை முடக்கி உள்ளதாக கூறினா்.
ADVERTISEMENT…👇
*
Comments are closed.