திருச்சி மாநகராட்சி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக தள்ளுவண்டிகள் நாள் கணக்கில் நிறுத்தப்பட்டு இருப்பதாக பொதுமக்களிடமிருந்து ஏராளமான புகார்கள் மாநகராட்சிக்கு வந்தது. இதையடுத்து முக்கிய சாலைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் தள்ளுவண்டிகளை முறைப்படுத்த ஆணையர் உத்தரவிட்டார் .
அதன்படி, திருச்சி சாஸ்திரி ரோடு, இரட்டை வாய்க்கால், தில்லை நகர் 11வது கிராஸ், 7-வது கிராஸ் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் பானி பூரி, சிக்கன் டிபன் வகைகளை தள்ளுவண்டிகளில் வைத்து விற்பனை செய்து விட்டு பகல் நேரங்களில் அங்கேயே நிறுத்திவிட்டு சென்றிருந்த 15 வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தப் பணியில் மாநகராட்சி உதவி ஆணையர் வெங்கடேசன் ஆலோசனையின் படி இளநிலை பொறியாளர் ரமேஷ், உதவி செயற்பொறியாளர் இப்ராஹிம் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த 7 தள்ளு வண்டிகளின் உரிமையாளர்கள் விரைந்து வந்து தங்களது தள்ளுவண்டியை மீட்டு சென்றனர்.
மீதமுள்ள 8 தள்ளுவண்டிகள் இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. **
Comments are closed.