Rock Fort Times
Online News

திருச்சி உறையூர் மீன் மார்க்கெட்டில் மாநகராட்சி மேயர் திடீர் ஆய்வு…

திருச்சி உறையூர் காசிவிலங்கி மீன் மார்க்கெட்டில் மொத்த மற்றும் சில்லறை வியாபாரம் நடந்து வருகிறது. இந்நிலையில் திருச்சி மாநகராட்சி மேயா் மு.அன்பழகன் மீன் மார்க்கெட்டுக்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், பொதுமக்களுக்கு சுகாதாரகேடு ஏற்படும் வகையில் மீன் கழிவுகளை சாலை மற்றும் ஆற்றங்கரை பகுதிகளில் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். மீன் கழிவுகளால் அப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் அடைக்கப்பட்டு கழிவுநீா் தேங்கி நிற்பதை கண்ட மேயர், அதனை உடனடியாக சரி செய்ய உத்தரவிட்டார்.

மேலும், மீன் மார்கெட்டை தினமும் தூய்மை செய்ய வேண்டும் என்றும், மாநகராட்சி வரையறுத்துள்ள எல்லைக்குள் மீன் கடைகள் செயல்பட வேண்டும் என்றும், வெளிப்புறங்களில் மீன் கடைகள் போடுவதை நிறுத்த வேண்டும் என்றும் கடைகாரா்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி மண்டலத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன், உதவி ஆணையர் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர் ராஜேஷ்கண்ணா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்