தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் திருச்சி உறையூர் வெக்களியம்மன் கோவில் புகழ்பெற்றதாகும். மண்மழையில் இருந்து உறையூரையும், மக்களையும் காப்பாற்றிய வெக்காளியம்மன் இன்றும் தனக்கு கூரையின்றி மழையில் நனைந்தும், வெயிலில் காயந்தும், வெட்ட வெளியில் வீற்றிருந்து உலக மக்கள் அனைவரையும் காத்து வருகிறார். இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 5 ந் தேதி தொடங்கி 16ந் தேதி வரை நடெபெறுகிறது. திருவிழாவின்
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை)காலை 8.30 மணிக்கு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று மாலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் வழிபாடு நடக்கிறது.
நாளை (15ந் தேதி) இரவு 7 மணிக்கு முத்து பல்லாக்கில் அம்மன் திருவிழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. 16ந்தேதி (செவ்வாய்க்கிழமை)பகல் 12 மணிக்கு மகா அபிஷேகமும், மாலை 7 மணிக்கு அம்பாள் திருவிதி உலா நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு காப்பு கலைதல், மற்றும் விடையாற்றி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர், தக்கார், லெட்சுமணன் மற்றும் துணை ஆணையர் சரவணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.