Rock Fort Times
Online News

சுதந்திரமாக வணிகம் செய்ய விடுங்கள் வணிகர் சங்கங்களின் பேரவை கோரிக்கை!

திருச்சி மேலப்புலிவார்டு ரோடு பகுதியில் நேற்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் வெற்றிவேல் வரவேற்றார். மாவட்ட தலைவர் பாபு தலைமை வகித்தார். கூட்டத்தில் திருச்சி மாநகராட்சியில் பெரிய கடைவீதி என்.எஸ்.பி ரோடு மற்றும் அதை சுற்றியுள்ள சிறுவணிகர்களை அப்புறப்படுத்தாமல் வணிகம் செய்வதற்கு திருச்சி மாவட்ட வணிகர் சங்க பேரவை உறுதுணையாக நிற்கும். பழமை வாய்ந்த காந்தி மார்க்கெட் தற்போதைய தி.மு.க. ஆட்சியில் தேர்தல் அறிக்கையின் படி நமது காந்தி மார்க்கெட்டை இதே இடத்திலேயே நவீனமயமாக புனரமைக்கப்பட்டு காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கே ஒப்படைக்க வேண்டும். சென்னை மும்பை போன்ற அனைத்து பெருநகரங்கிலும் கடை வீதிகளை சுற்றி சிறு குறு வணிகர்கள் வணிகம் செய்வது போல் திருச்சி மாவட்டத்திலும் சுதந்திரமாக வணிகம் செய்ய வேண்டும் என திருச்சி மாவட்ட வணிகர் சங்க பேரவை கேட்டுக்கொள்கிறது. திருச்சி மாவட்ட வணிகர்கள் மீது கூடுதலாக சுமத்தப்பட்டுள்ள தொழில் வரி, டி.என்.ஓ. லைசன்ஸ், உணவு பாதுகாப்பு வரி, சேவை வரி, கலால் வரி இன்னும் மேற்பட்ட வரிகளை குறைக்க வேண்டும் . மாநில தலைவர் வெள்ளையன் தலைமையில் 40-வது மாநில மாநாட்டிற்கு திருச்சி மாவட்டத்தில் இருந்து பஸ், வேன், கார்கள், மூலம் 60-க்கும் மேற்பட்ட வாகனங்கள், 2000-க்கும் மேற்பட்ட வணிகர்கள் மாநாட்டில் கலந்து கொள்வது என உறுதி செய்யப்பட்டுகிறது. தமிழ்நாடு வணிகர் சங்கபேரவையின் சில்லறை வணிகம் காக்கப்படும் என்கின்ற 40-வது மாநில மாநாடு வரும் மே 5ம் தேதி சென்னை அச்சரப்பாக்கத்தில் நடக்கிறது. மாநாட்டில திரளாக வணிகர்கள் குடும்பங்களும் மற்றும் கடை ஊழியர்களும் கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. கூட்டத்தில் லால்குடி, தொட்டியம், மணப்பாறை, கே.கே.நகர், எடமலைப்பட்டிபுதூர், ஸ்ரீரங்கம், துவாக்குடி, உப்பிலியபுரம், உள்ளிட்ட பகுதிகளில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் இஸ்மாயில் சேட் நன்றி கூறினார்.

1 Comment
  1. mitolyn reviews says

    **mitolyn reviews**

    Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்