திருச்சி துவாக்குடி அரசு மாதிரிப்பள்ளி மாணவர் தற்கொலை எதிரொலி..!- அமைச்சர் அன்பில் மகேஷ் நேரடி ஆய்வு..!
திருச்சி திருவெறும்பூர் அருகேயுள்ள துவாக்குடியில் அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள விடுதியில் தங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ – மாணவிகள் பயின்று வருகின்றனர்.இந்நிலையில் இப்பள்ளியில் பயின்று வந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் விடுதி அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது தமிழகம் முழுவதும் பல்வேறு அதிர்வலைகளை கிளப்பியது. மாணவர் தற்கொலை விவகாரம் பல்வேறு சந்தேகங்களை கிளப்புவதாகவும், இது குறித்து முறையாக விசாரணை செய்ய வேண்டும் எனவும் பாமக. தலைவர் அன்புமணி தனது எக்ஸ் தள பக்கத்தில் இன்று பதிவிட்டிருந்தார். இந்த. நிலையில் அப்பள்ளிக்கு நேரில் சென்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாணவரின் மரணம் குறித்து அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கேட்டறிந்ததோடு சக மாணவர்களிடமும் கலந்துரையாடினார். . இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக ஊக்கமளிக்கும் உரை போன்ற நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து பள்ளி வளாகம் முழுவதும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
Comments are closed.