Rock Fort Times
Online News

திருச்சி தாராநல்லூர் எஸ்.கே.டி. வினோதினி அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை…!

12- ம் ஆண்டாக வழங்கப்பட்டது

திருச்சி தாராநல்லூரைச் சேர்ந்த எஸ்.கே.டி. வினோதினி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் ஏழை மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, நோட்டுப் புத்தகங்கள், ஸ்கூல் பேக் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் 12-ம் ஆண்டாக அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி ஜூன் 9ம் தேதி தாராநல்லூரில் நடைபெற்றது. விழாவிற்கு அறக்கட்டளை தலைவர் எஸ்.கே.டி.பாண்டியன் தலைமை தாங்கினார். பொருளாளர் தங்கப்பாண்டியன், சோழிய வேளாளர் நலச்சங்க இளைஞர் அணி மாநில தலைவர் தங்கம் ரத்தினகுமார், திருச்சி மாவட்ட அமைப்பாளர் திருநாவுக்கரசு, மாநில செயற்குழு உறுப்பினர் மகாலிங்கம், டைமண்ட் பாலு, பெரியண்ணா பில்டர்ஸ் செந்தில்குமார், கோபிநாத் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். செயலாளர் டி.சித்ரா வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ஜிவிஎன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜெ.செந்தில், திருச்சி மாநகர் மாவட்ட பாஜக தலைவர் எஸ்.ராஜசேகர், திருச்சி ராக்போர்ட் டைம்ஸ் வார இதழ் முதன்மை செய்தி ஆசிரியர் எஸ்.ஆர். லெஷ்மி நாராயணன், வழக்கறிஞர் எஸ்.கே.சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, நோட்டுப் புத்தகங்கள், ஸ்கூல் பேக் ஆகியவற்றை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை எஸ்.கே.டி.முருகானந்தம், வினோத்குமார் மற்றும் சோழிய வேளாளர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்