திருச்சி மாவட்ட புதிய காவல்துறை கண்காணிப்பாளராக டாக்டா். வீ.வருண்குமாா் ஐபிஎஸ் இன்று ( 11.08.2023 ) பொறுப்பேற்றுக் கொண்டாா். திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற வருண்குமார் கூறுகையில் :
திருச்சி மாவட்டத்தில் தேங்கியுள்ள குற்ற வழக்குகள் அனைத்தும் விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி மாவட்ட மக்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து உடனுக்குடன் தகவல் தெரிவிக்க, 94874 64651 என்ற பிரத்தியேக மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம். வாட்ஸ் அப் மூலமும் தங்களது தகவல்களை தெரிவிக்கலாம் என கூறியுள்ளாா்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.