திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..!* கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்றது. அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர், முன்னாள் அமைச்சர் தாமோதரன், அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் தாடி ம.ராசு, அமைப்புச் செயலாளர் ஆர்.மனோகரன், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் பூனாட்சி, சிறுபான்மையினர் நலப் பிரிவு மாநில துணை செயலாளர் புல்லட்ஜான், மாவட்ட அவைத் தலைவர் சமயபுரம் ராமு, முன்னாள் எம் எல் ஏ. இந்திரா காந்தி, மாவட்ட துணை செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் சேவியர், மீனவரணி பேரூர் கண்ணதாசன், பேரவை செயலாளர் ஐயம்பாளையம் ரமேஷ், மாணவரணி அறிவழகன், இலக்கிய அணி ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் எஸ்பி முத்துகருப்பன், ஜெயக்குமார், ஆதாளி பகுதி செயலாளர் சுந்தர்ராஜ், டைமன் திருப்பதி மற்றும் மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வருகிற மே-12ம் தேதி
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளில் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் ரத்த தானம் வழங்கியும் மாவட்ட கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடுவது. 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Comments are closed.