Rock Fort Times
Online News

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க ஆலோசனை கூட்டம்….

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி தலைமை தாங்கி ஆலோசனைகள் வழங்கினார். இந்த கூட்டத்தில் கழக உறுப்பினர் சேர்க்கையை விரைவாக முடிப்பது, ஆகஸ்டு 8-ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் அதிகளவில் கலந்து கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வளர்மதி, கழக எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் என். ஆர்.சிவபதி, மாவட்ட கழக அவை தலைவர் பிரின்ஸ் தங்கவேல், அம்மா பேரவை இணை செயலாளர் செல்வராசு, முன்னாள் அமைச்சர் பூனாட்சி, மாவட்ட கழக இணை செயலாளர் இந்திராகாந்தி, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் சுப்பு, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல இணைச் செயலாளர் திருநாவுக்கரசு, பாஸ்கரன், ஏவூர் நாகராஜன், அன்பு பிரபாகரன், துரைராஜ், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார், நகர கழக செயலாளர்கள் சுப்ரமணியன், அமைதி பாலு, ஒன்றிய கழக செயலாளர்கள் ஆதாளி, ராஜமாணிக்கம், சேனை செல்வம், முத்துக்கருப்பன், எல்.ஜெயக்குமார், நடராஜன், பிரகாஷவேல், ஆமூர் ஜெயராமன், ஜெயம், ராம் மோகன், வெங்கடேசன், ஜெயக்குமார், அழகாபுரி செல்வராஜ், கடிகை ராஜகோபால், பேரூராட்சி கழக செயலாளர்கள் ராமச்சந்திரன், சம்பத்குமார், திருஞானம் பிள்ளை, மற்றும் கழக நிர்வாகிகள் நெடுமாறன், துறையூர் சரோஜா, எஸ் வி. ஆர் ரவிசங்கர், நடேசன திரளாக கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்