சரக்கு ரெயில்கள் இயக்குவதில் தாமதம். திருச்சி எஸ் .ஆர்.எம்.யு. ரயில் என்ஜின் டிரைவர்கள் மற்றும் உதவி என்ஜின் டிரைவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ஜங்ஷன் ரெயில்வே டி.ஆர்.எம்.அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சுதாகர் தலைமை தாங்கினார். மயில்வாகனன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் எஸ். ஆர்.எம்.யு.துணை பொது செயலாளர் வீரசேகரன் சிறப்புரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் , 9 மணி நேரத்துக்கு மேலாக கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதை நிறுத்த வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.ஆர்ப்பாட்டத்தில் ரெயில்வே பொறியாளர் கிரண் குமார், ரெயில் என்ஜின் டிரைவர்கள், மற்றும் உதவி என்ஜின் டிரைவர்கள் கலந்து கொண்டனர்.இந்த ஆர்ப்பாட்டம் மதியம் வரை நடைபெற்றதால் சரக்கு ரெயில்கள் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது.