Rock Fort Times
Online News

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நாளை பிப்.3 அண்ணா நினைவு நாள் மௌன ஊர்வலம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை…!

தமிழ்நாடுமுன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 56 -வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சியில் நாளை (03-02-2025) மெளன ஊர்வலம் நடைபெறுகிறது. இதுதொடர்பாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பேரறிஞர் அண்ணாவின் 56 -ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நாளை (திங்கட்கிழமை) காலை 7.45 மணி அளவில் சத்திரம் பேருந்து நிலையம் கர்மவீரர் காமராஜர் சிலையில் இருந்து, சிந்தாமணியில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மௌன ஊர்வலமாகச் சென்று காலை
8 மணிக்கு பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னோடிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்