திமுக அரசை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 11 இடங்களில் மனித சங்கிலி போராட்டம்…!
தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று (12-03-2024) அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அதேபோல, திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில், கழக செயலாளரும், முன்னாள் எம்பி யுமான குமார் தலைமையில், திருச்சி லால்குடி நகராட்சி அலுவலகம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் எம்எல்ஏ எஸ்.எம்.பாலன், ஒன்றிய செயலாளர் அசோகன், நகர செயலாளர் பொன்னி சேகர், அவை தலைவர் அருணகிரி, மகளிர் அணி மாவட்ட செயலாளர் செல்வ மேரி ஜார்ஜ், பாசறை மாவட்ட செயலாளர் வி.டி.எம் அருண்நேரு உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இதேபோல அதிமுக தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர், லால்குடி, மணப்பாறை உள்ளிட்ட 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 11 இடங்களில் இந்த மனித சங்கிலி போராட்டமானது நடைபெற்றது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.