Rock Fort Times
Online News

திருச்சி சாமி குழுமத்தின் புதிய தார் தொழிற்சாலை..!* அமைச்சர் கே.என்.நேரு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்…

திருச்சி சாமி குழுமத்தின் மற்றுமொரு புதிய நிறுவனமான தார் தயாரிக்கும் தொழிற்சாலையை, திருச்சி ஓலையூர் அருகே உள்ள குளவாய்பட்டியில், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில், சாமி குழுமத்தின் நிர்வாக இயக்குனர்கள் இளமுருகன், தேன்மொழி இளமுருகன், திருச்சி அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் எம்.சின்னசாமி, திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மத்திய மாவட்ட தி.மு.கழக செயலாளர் க.வைரமணி, மணிகண்டம் ஒன்றிய செயலாளர் கருப்பையா, விக்னேஷ் கல்வி குழுமத்தின் இயக்குனர் கோபிநாத், ஜி.ஆர் சிட்பண்ட்ஸ் இயக்குனர் ராமசாமி, சாலை பணி ஒப்பந்தக்காரர்கள் சங்க மாநில தலைவர் திரிசங்கு, சி.வி.பி மார்டன் அரிசி ஆலை உரிமையாளர் சேகர், அந்தநல்லூர் ஒன்றிய முன்னாள் தலைவர் துரைராஜ், குடமுருட்டிசேகர் மற்றும் தொழிலதிபர் எஸ்.எம்.டி.மூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்