Rock Fort Times
Online News

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் வருவாய் ரூ.82 லட்சம்…!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோவிலில் உள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்துவது வழக்கம். அந்த உண்டியல்களில் உள்ள காணிக்கை பொருட்கள் அவ்வப்போது திறந்து எண்ணபடுகின்றன.அந்தவகையில் கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் வி.எஸ்.பி. இளங்கோவன், இணை ஆணையர் சி.கல்யாணி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பிச்சைமணி, இராஜ.சுகந்தி, சே.லெட்சுமணன் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றன. காணிக்கை எண்ணும் பணியில் அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். முடிவில் திறக்கப்பட்ட உண்டியல்களிலிருந்து ரூ.82 லட்சத்து 57 ஆயிரத்து 958 ரொக்கமும், 2 கிலோ 207 கிராம் தங்கம், 2 கிலோ 950 கிராம் வெள்ளி, 114 வெளிநாட்டு பணம், 683 வெளிநாட்டு நாணயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்