சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வருகிற 07.09.2025 ( ஞாயிற்றுக்கிழமை) கோவில் நடை சாற்றப்பட இருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் இரவு 09.57 மணி முதல் மறுநாள் அதிகாலை 1.26 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படுவதால், வழக்கம்போல் நடைபெறும் வழிபாட்டு நிகழ்ச்சிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பௌர்ணமி நாளான செப்டம்பர் 7ம் தேதி கோவில் நடை இரவு 7.30 மணிக்கே சாற்றப்படும். மறுநாள் 8-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு வழக்கம் போல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். அன்றைய தினம் நடைபெறும் பௌர்ணமி 108 விளக்கு பூஜை, பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என கோவில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.