Rock Fort Times
Online News

திருச்சி, முத்தரசநல்லூரில் சாலையில் சிதறி கிடந்த ஜல்லிக் கற்களை அகற்றிய காவல்துறையினருக்கு குவியும் பாராட்டு…

திருச்சி- கரூர் நெடுஞ்சாலையில் விபத்து பகுதியான முத்தரசநல்லூர் வேகத்தடை பகுதியில் சாலையில் கனரக வாகனங்களில் இருந்து சிதறிய ஜல்லி கற்கள் சாலையில் பரவிக் கிடந்தன. இதனால், அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் தடுமாறி கீழே விழும் ஆபத்து நிலவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி- கரூர் நெடுஞ்சாலை காவல் ரோந்து வாகனம் 7 சிறப்பு உதவி ஆய்வாளர் பிரிடா ஜெபகுமாரி மற்றும் தலைமைக் காவலர் சோமசுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து சாலையில் கொட்டி கிடந்த ஜல்லி கற்களை அகற்றி சாலை பயனீட்டாளர்களின் சாலை பாதுகாப்பினை உறுதிபடுத்தினர். அதற்கான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்க்கும் காவல்துறை அதிகாரிகள், அவர்களது தன்னலமற்ற சேவையை பாராட்டி வருகின்றனர்.

அதேபோல வீடியோவை பார்க்கும் பலரும்  காக்கும் பணி மட்டுமின்றி உயிர் காக்கும் பணியையும் மேற்கொண்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பிரிடா ஜெபகுமாரி மற்றும் தலைமைக் காவலர் சோமசுந்தரம் ஆகியோரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்