Rock Fort Times
Online News

திருச்சி பொன்மலை “ஜி கார்னர்” பாலத்தில் மீண்டும் ஏற்பட்ட விரிசலை சீரமைக்கும் பணி தொடங்கியது…!

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் பொன்மலை ஜி கார்னர் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் ஒரு பகுதியில்  கடந்த ஜனவரி மாதம் 12-ம் தேதி விரிசல் ஏற்பட்டது.  இதனையடுத்து அப்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு அருகில் உள்ள மற்றொரு பாலத்தின் வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டது.  பின்னர், நெடுஞ்சாலைத் துறையினர் சுமார் இரண்டு மாதம் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர் .  அதன்பிறகு அதன் உறுதித் தன்மை பரிசோதிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.  ஆனால், சீரமைக்கப்பட்ட பாலத்துக்கு அருகே  சங்கிலியாண்டபுரம்  செல்லும் சப்-வேக்கு அருகில் பாலத்தில் இரண்டு இடங்களில் லேசாக விரிசல் ஏற்பட்டுள்ளது.  இதனால், இதன் வழியாக வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.  இதுகுறித்த தகவலின்பேரில்  ஐஐடி பேராசிரியர் அழகுசுந்தரம் தலைமையில் வந்த குழுவினர் பாலத்தின் உறுதித் தன்மையை ஆராய்ந்து,  பாலம் சீரமைப்பு குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது  பாலத்தில் ஏற்பட்ட விரிசலால் பெரிய பாதிப்பு இல்லை.  விரிசல் ஏற்பட்ட பகுதிகளை  நெய்லிங் முறைப்படி  வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது.  அதன்படி, இன்று(14-09-2024) பாலத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்த பாலப்ணிகள் சுமார் ஒரு மாத காலம் நடைபெறும் எனக் கூறப்படும் நிலையில் பாலத்தின் மேல் வாகனங்கள் செல்ல எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை.இதனால் வழக்கம்போல் வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்