Rock Fort Times
Online News

திருச்சியில் சீகன் பால்க் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..

அருட்தொண்டர் சீகன் பால்க் இந்திய வருகையின் 317-வது ஆண்டு விழாவை ஒட்டி திருச்சி டி.இ.எல்.சி. வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ஜான்பிரகாஷ், மண்டல செயலாளர் அலெக்ஸ் ராஜா, மாவட்டத் தலைவர் ஜேக்கப், கிழக்கு மாவட்ட செயலாளர் புஷ்பராஜ், மண்டல குழு தலைவர் ஜெயநிர்மலா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் பாதிரியார்கள் கண்ணன் டேவிட், விஜய் பிலவேந்திரன், எட்வர்டு ஜான்சன், ஆசிரியர் ஜோஸ்வா ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்