திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக, மதிமுக, அ.ம.மு.க, நா.த.க.வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு…!
10 மனுக்கள் நிராகரிப்பு
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக, மதிமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 48 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று( 28-03- 2024)நடைபெற்றது. ஒரே வேட்பாளர் இரண்டு வேட்பு மனுக்களும் மாற்று வேட்பாளர் மனுவும் அளித்திருந்தனர். இதில், அதிமுக வேட்பாளர் கருப்பையா, மதிமுக வேட்பாளர் துரை வைகோ, அ.ம.மு.க.வேட்பாளர் செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜேஷ் உள்பட 38 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 10 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. வருகிற 30-ந்தேதி மனுக்களை வாபஸ் பெறலாம். அன்றைய தினம் மாலை 3 மணிக்கு பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது. மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.